கிணற்றை ஆழப்படுத்த ரூ.25 ஆயிரம் கடன்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது கிணற்றை ஆழப்படுத்த கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கிப் பயன்பெறலாம் என்று குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையிலான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், வேளாண் இணை இயக்குநர் மீ.சு.செண்பகராஜ், துணை இயக்குநர் மற்றும் நேர்முக உதவியாளர் (வேளாண்) ம.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்துப் பேசினர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து விவசாயத்துக்குத் தேவையான வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், வருவாய்த் துறையில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இதேபோல, மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களை விவசாயிகள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களது கிணற்றை ஆழப்படுத்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.25 ஆயிரம் கடனுதவியை சர்க்கரை ஆலைகளின் பரிந்துரையின் பேரில் பெற்றுப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

3 thoughts on “கிணற்றை ஆழப்படுத்த ரூ.25 ஆயிரம் கடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!