நடுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் “கற்க கசடற “மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் மற்றும் SET IF பவுண்டேஷன் இணைந்து நடத்திய இந்த விழாவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மு.வெற்றிவேல் அவர்கள் தலைமை வகித்தார். பவுண்டேஷன் நிர்வாகி கேசவராஜ் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு. பெ.ஏழுமலை அவர்கள் பங்கேற்று, கல்வி கற்க வேண்டிய அவசியம் பற்றியும், கற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறைகளையும் விளக்கி பேசினார். மேலும் மாணவ மாணவிகளின் பேச்சரங்கம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *