அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கூட்டங்களில், கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இரு வார இயக்கத்தை அக்டோபர் 1 முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடுவது குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்பன உள்பட 16 பொருள்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Yuvaraj V

Journalist , Digital Media Consultant.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *