வந்தவாசியில் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்திய மன நலம் குன்றிய நபர்

வந்தவாசி நகரில் சன்னதி தெருவில் ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் பொதுமக்கள் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வந்தவாசி நகரை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். அறைக்குள் நுழைந்து அங்கிருந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களை, இரும்பு கம்பியால் தாக்கி உடைத்தார். இதை தொடர்ந்து பணம் எடுப்பதற்காக நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் வாலிபரை அந்த அறைக்குவைத்து பூட்டி விட்டனர்.

அதைத்தொடர்ந்து இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு விரைந்து வந்து வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரை எச்சரித்து, உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இந்த வாலிபர் இதேபோன்று ஏ.டி.எம். எந்திரகளை உடைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

செய்தி-தினத்தந்தி

One thought on “வந்தவாசியில் ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்திய மன நலம் குன்றிய நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *