வந்தவாசியை அடுத்துள்ள மாம்பட்டு கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

வந்தவாசியை அடுத்துள்ள மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள மஹாசக்தி முத்துமாரி அம்மன் கோயில், ஆதிசக்தி ஸ்ரீசர்வமங்கள காளி சக்திபீடத்தில் 37-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் ஆடித் திருவிழா திங்கள்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, 1008 கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் நீண்ட ஆயுள், அனைத்து வளங்களும் பெற வேண்டி மஹா சக்தி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை மூலவர் அம்மனுக்கு மகாபிஷேகம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர், குளக்கரையிலிருந்து அம்மன் சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது. இதனுடன் 303 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.
மேலும், முத்துமாரியம்மன் அன்னதான குழுவினரால் அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஏ.எஸ்.சங்கர், செயலர் ஆறு.இலட்சுமணன், பொருளர் ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *