தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வுகளில் தமிழில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், வந்தவாசி வட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
விழாவுக்கு சங்கத் தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் க.சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ப.பன்னீர்செல்வம், சி.இராஜேந்திரன், ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரி பேராசிரியை மா.மோகனாம்பாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் சு.வெங்கடேசன் வரவேற்றார். புலவர் ஏ.ஏழுமலை குறளும் பொருளும் கூறினார்.
“பாரதியும் மாணவரும்’ என்ற தலைப்பில் தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் மா.இரஜினி சிறப்புரை ஆற்றினார்.
சங்கப் புரவலர் இரா.சிவக்குமரன் மாணவ, மாணவிகளை பாராட்டிப் பேசினார். வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மு.சங்கர் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.வையாபுரிராஜா மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். சங்கப் பொருளர் ஆ.மயில்வாகனன் நன்றி கூறினார்.
விழாவில் மு.கு.அன்பழகன், த.முருகவேல், கோ.ஸ்ரீதர், வீ.தமிழரசன், தெ.ச.ப.அகிலன், சாமி, பிச்சாண்டி, ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *