வந்தவாசி நகராட்சி தலைவர் பதவி, பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு

தமிழகத்தில், ஒன்பது நகராட்சி தலைவர் பதவி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; 52 நகராட்சி தலைவர் பதவிகள், பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்தெந்த பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரியவந்துள்ளது. நகராட்சி தலைவர் பதவிகள்: எஸ்.சி., பொது நெல்லிகுப்பம், அரக்கோணம், நெல்லியாளம், ஆத்துார், நரசிங்கபுரம், திருவேற்காடு, கூத்தநல்லுார், மறைமலைநகர். எஸ்.சி.,

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்' என, எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊர்க்காவல் படைக்கு செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து மட்டும், 55 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உள்ளாட்சி தேர்தல் தேதி 22-ந்தேதி அறிவிக்க வாய்ப்பு

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. புதிய உறுப்பினர்கள் 25-ந்தேதி பதவி ஏற்க வேண்டும். இதற்காக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. சட்டசபை தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும்

தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் இலக்கிய விருது

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேஷ். கடந்த முப்பதாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள்,

வந்தவாசியில் மின்தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (17-09-2016) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி நகரம், கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி கோட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த ஞானசேகரன், கடந்த ஜூலை மாதம், 27ம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். அன்று முதல் டி.ஆர்.ஓ., பழனி, பொறுப்பு ஆட்சியராக இருந்து வந்தார். இந்நிலையில், நிதித்துறை துணை செயலாளராக இருந்த பிரசாந்த் எம். வாட்னரே, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த, 2008ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில்

சட்ட விழிப்புணர்வு முகாம்

மாணவர்கள் அடிப்படை உரிமை சட்டங்களை அறிய முனைப்பு காட்ட வேண்டும் என்று செய்யாறு அரசு கல்லூரியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில், சார்பு நீதிபதி கீதாராணி கூறினார். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று மாலை நடந்தது. செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லூரி முதல்வர் எஸ்.நிர்மலாதேவி தலைமை தாங்கினார். பேராசிரியர் ஆ.மூர்த்தி வரவேற்றார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் என்.ஜானகிராமன், செயலாளர்

Top